முகப்பு
மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்...

கீரையை மசிக்கும்போது, அதனுடன் வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து மசித்தால் ருசி கூடும்.

Updated On : 28 ஜூன் 2026, 4:01 am IST
பகிர்:

கீரையை மசிக்கும்போது, அதனுடன் வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து மசித்தால் ருசி கூடும்.

ரவா லட்டு பிடிக்கும்போது, சிறிது ரோஸ் எசன்ஸ் விட்டுப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

வல்லாரை இலைத் தூள் 100 கிராம், வசம்புத் தூள் 15 கிராம் என இரண்டையும் கலந்து, 5 கிராம் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், மந்த புத்தி மாறும்.

Advertisement

Advertisement

நாள்தோறும் பெரிய நெல்லிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால், மூளை நல்ல நிலையில் இயங்கும்.

கசகசாவை ஊறவைத்து, அரைத்து வாரம் மூன்று முறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி கருமையாக மாறும். செம்பட்டை நிறம்கூட மாறிவிடும்.

ஆழாக்கு அரிசி மாவுக்கு ஒரு தேக்கரண்டி வறுத்து அரைத்த உளுந்தம் பருப்பு மாவை சேர்த்துச் செய்ய சீடை ருசியாக இருக்கும்.

தேங்காய்ச் சட்னிக்கு கடுகு, உளுந்துடன் கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்க வேண்டும். தக்காளிச் சட்னிக்கு எண்ணெய்யில் கறிவேப்பிலையைப் பொரித்துப் போட்டால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments