இன்டர்நெட் டிப்ஸ்
செல்போன்களில் பதிவு செய்திருக்கும் எண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடவும். தவறுதலாக அழித்துவிட்டாலோ, தொலைந்துவிட்டாலோ மீண்டும் செல்போனில் ஏற்றிவிடலாம்.
• செல்போன்களில் பதிவு செய்திருக்கும் எண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடவும். தவறுதலாக அழித்துவிட்டாலோ, தொலைந்துவிட்டாலோ மீண்டும் செல்போனில் ஏற்றிவிடலாம்.
• முன்பின் தெரியாத பெயர்களில் மின்னஞ்சல்கள் வந்தால் அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம். குறிப்பாக இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்கள் மீது அதிக கவனம் தேவை. கண்டிப்பாக இவை வைரஸ்களைக் கொண்டிருக்கும்.
• ரயில், விமானப் பயணங்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி, ஆன்-லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.
• ஆன்-லைனில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறிய திரைகள் தோன்றி "இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ரெடியா?' என்ற தொனியில் உங்களை கவர்ந்திழுக்கும். "க்ளிக்' செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள், அழையா விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.
• கம்ப்யூட்டரில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நாம் சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும். எனவே கம்ப்யூட்டரிலுள்ள முக்கிய தகவல்கள் அனைத்தையும் "பேக்-அப்' எடுத்துக் கொள்வது அவசியம்.
• நண்பர்களிடமிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. "ஃபார்வேட்' பட்டனை அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன் அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கிவிடுங்கள்.
• சோஷியல் நெட்வொர்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால் நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் பயன்படுத்தக் கூடும்.
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி