முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேனியிருந்து வரும் மற்றொரு பாடலாசிரியர்

சமீபமாக பளீச் பாடல் வரிகளில் கவனம் ஈர்க்கிறார் கவிஞர் அருண் பாரதி. "அண்ணாதுரை' படத்தில் இடம்பெற்ற "தங்கமா வைரமா...' பாடல் இவரின் முதல் அடையாளம்.

Updated On : 1 ஏப்ரல் 2018, 12:00 pm IST
பகிர்:

சமீபமாக பளீச் பாடல் வரிகளில் கவனம் ஈர்க்கிறார் கவிஞர் அருண் பாரதி. "அண்ணாதுரை' படத்தில் இடம்பெற்ற "தங்கமா வைரமா...' பாடல் இவரின் முதல் அடையாளம். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். அருண்பாரதி பேசும் போது.... ""தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். சிறு வயது முதலே கவிதை, எழுத்து என திரிந்து வளர்ந்தவன். சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பைத் தேடி சென்னைக்கு வந்தேன். தற்போது பல சூழல்களை கடந்து பாடலாசிரியர் என்ற இடத்துக்கு வந்திருக்கிறேன். கே.பாக்யராஜ் மெட்டுக்கு பாடல் எழுதும் கலையை கற்று தந்து, அவரின் "துணை முதல்வர்' படத்தில் முதல் பாடலை எழுத வைத்தார். அதன் பின் மொழி மாற்று படங்கள், ஆல்பங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தேன். அப்போது விஜய் ஆண்டனியை சந்தித்து பாடல் எழுதும் வாய்ப்பு கேட்டேன். அவர் "அண்ணாதுரை' படத்தில் பெரும் வாய்ப்பு தந்து எழுத வைத்தார். அதில் வந்த "தங்கமா... வைரமா..' என்ற பாடல் எல்லோரையும் சென்று சேர்ந்தது. இந்தப் பாடலுக்கு பின் மற்ற இயக்குநர்களின் பார்வையில் படத் தொடங்கினேன். அடுத்து "காளி' படத்திலும் எழுத இடம் தந்துள்ளார். இதில் வந்துள்ள அம்மா பாசத்தை பற்றிய பாடல், புது மாதிரியாக இருக்கும். அடுத்து லிங்குசாமியின் "சண்டகோழி 2', சற்குணம் இயக்கும் "களவாணி 2' உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதி வருகிறேன். சமீபத்தில் "புதிய பானையில் பழைய சோறு' என்ற பெயரில் எனது கவிதை தொகுப்புகள் வந்துள்ளன. இந்த நேரத்தில் என்னை அரவணைத்து வளர்த்தெடுத்த கே.பாக்யராஜ், அறிவுமதி ஆகிய ஆளுமைகளுக்கு என் நன்றிகள்'' என்றார் அருண் பாரதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments