முகப்பு
தமிழ்நாடு

திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்

திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவது குறித்து...

Updated On : 28 ஜூன் 2026, 12:21 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சித்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் மு.க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து ஆட்சியமைக்க ஒவ்வொரு நாளும் முயற்சித்து வருகின்றனர். இதற்காகவே ஓர் அணி அமைத்து நாள்தோறும் இதற்கான வேலைசெய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தமிழக மக்கள் விஜய் முதல்வராக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அதனை எதிர்த்து, குறுக்கு வழியில் யாரையேனும் விலைக்கு வாங்க மு.க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் சேர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் வெளிப்பாடே, ஒவ்வொருவரும் அவர்களின் கூட்டணியிலிருந்து வெளி வருவதற்கான முக்கிய காரணம். ஒவ்வொரு கட்சியையும் உடைப்பதற்கான வேலைகளையே அவர்கள் செய்து வருகின்றனர்.

எல்லோரையும் மிரட்டும் வகையிலும், பணத்தைக் கொடுத்து பல எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் வேலையைத்தான் செய்து வருகின்றனர்.

மதிமுக சார்பில் போட்டியிட்ட எம்எல்ஏ-க்களை அவர்களின் கட்சிக் கூட்டத்துக்கே செல்ல விடாமல் செய்தது யார்? அப்படியெனில், ஆட்சியில் இருந்தபோது என்னென்ன செய்திருப்பர்?

திருமாவளவன் உள்பட பல கட்சிகளையும் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்ல விடாமல் இவர்கள் மிரட்டியுள்ளார்கள். இப்போதும் செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் மு.க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் சேர்ந்து ஆட்சியமைக்க ஒவ்வொரு நாளும் முயற்சிப்பதற்கு, திமுக எம்எல்ஏ-க்களே பலரும் உடன்படவில்லை. திமுக எம்எல்ஏ-க்களில் பலர் ராஜிநாமா செய்தாலும் ஆச்சரியமில்லை.

திமுகவும் அதிமுகவும் இன்று ஆட்சியமைத்து விடலாம். ஆனால், நாளை எப்படி மக்களை எதிர்கொள்வீர்கள்? மக்களிடம் எப்படி கூச்சமேயில்லாமல், திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக சொல்வீர்களா? இவர்கள் இன்னும் பல ஜனநாயக படுகொலைகள் செய்யத் தயாராக இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

summary

DMK and AIADMK continue efforts to form a government together, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments