முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மர்மங்களின் விசாரணை

ஓர் இளம்பெண்ணைச் சுற்றி நடக்கும் மர்ம நிகழ்வுகளின் முடிச்சுகளை விறுவிறுப்பாக அவிழ்க்கும் திரைக்கதையில் உருவாகியுள்ள படம் 'அந்தரன்'.

Updated On : 12 ஏப்ரல் 2026, 4:01 am IST
பகிர்:

ஓர் இளம்பெண்ணைச் சுற்றி நடக்கும் மர்ம நிகழ்வுகளின் முடிச்சுகளை விறுவிறுப்பாக அவிழ்க்கும் திரைக்கதையில் உருவாகியுள்ள படம் 'அந்தரன்'. 'அடவி', 'மனிதர்கள்' படங்களைத் தொடர்ந்து ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மு. கி. சாம்பசிவம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் இராவணன் கதை எழுதி இயக்கியுள்ளார்.

'நெடிய கழியும் இரா' குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சந்தோஷ் இராவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லக்னோவில் நடைபெற்ற சர்வதேச மிஸ்டர் யுனிவர்ஸ் 2025 பேஜண்ட் நிகழ்ச்சியில் ரன்னர்-அப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Advertisement

Advertisement

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'ஓர் இளம் பெண்ணைச் சுற்றி பல்வேறு மர்ம நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்கு என்ன காரணம், இவற்றுக்குப் பின்னால் உள்ளவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு காவல் அதிகாரி களத்தில் குதிக்கிறார். இதற்குப் பின் என்ன ஆகிறது என்பதே கதை. விறுவிறுப்பான திரைக்கதையோடு இதை வழங்கியுள்ளோம்.

காவல் அதிகாரியாக பிரஜினும், இளம் பெண்ணாக புதுமுகம் இவானா வருணும் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் மு. கி. சாம்பசிவம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்' என்றார்.

படத்துக்கு ஹரி எஸ். ஆர். இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இக்னேஷியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா படத்தொகுப்பைக் கையாண்டுள்ளனர். விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.