முகப்பு
வெள்ளிமணி

மனமும் உடலும் சீராகும்!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோயில் அருகில் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ளது  மயிலரங்கம்.  இங்குதான் தையல்நாயகி உடனுறை வைத்தீசுவரர் அருள்புரிகிறார்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 4:06 pm IST
பகிர்:

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோயில் அருகில் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ளது  மயிலரங்கம்.  இங்குதான் தையல்நாயகி உடனுறை வைத்தீசுவரர் அருள்புரிகிறார்.

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்துவிட்டு வரும் வழியில் மயில் வாகனத்தை விட்டு இறங்கி வைத்தீசுவரப் பெருமானை வணங்கிச் சென்றதாக தல புராணம். இவ்வாறு மயில் இறங்கிச் சென்றதால் இவ்வாலயம் மயிலரங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆறு இரண்டாகப் பிரிந்து செல்லும் ஆற்று இடைக்குறைப் பகுதி "அரங்கம்' என்று அழைக்கப் பெறும். இக்காரணத்தாலும் மயில்கள் அதிக அளவு இப்பகுதியில் இருப்பதாலும் இத்திருத்தலம் மயிலரங்கம் என்று அழைக்கப்படுகிறது எனலாம். 

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதியும், கரிவரதராஜப் பெருமான் சந்நிதியும், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதியும் அமைந்துள்ளன.  இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் விஜய நகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தவை.

Advertisement

Advertisement

கருவறை, நடுமண்டபம், முன்மண்டபத்துடன் காட்சியளிக்கிறது இவ்வாலயம். அம்மன் சந்நிதியின் வடபுறம் நாட்டிய அரங்க மண்டபம் உள்ளது. இதில் நான்கு இசைத்தூண்கள் உள்ளன.

தையல்நாயகி உடனுறை வைத்தீசுவரரை வணங்கினால் உடலும், மனமும் சீராகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

தகவலுக்கு:  94437 27539.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments