சவாலை எதிர்கொள்ளத் தயார்: அமெரிக்கா
எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், வடகொரியா வரம்புமீறி அபாயக் கோட்டைத் தாண்ட முயற்சிக்கிறது என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹெகல் தெரிவித்துள்ளார்.
எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், வடகொரியா வரம்புமீறி அபாயக் கோட்டைத் தாண்ட முயற்சிக்கிறது என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹெகல் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதச் சோதனை நடத்தியதால் பொருளாதாரத் தடைகûளை சந்தித்து வரும் வடகொரியா, அதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டியுள்ளது.
தனது கிழக்குப் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதுடன், மத்திய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இம்முயற்சியை கைவிடும்படி பல்வேறு நாடுகளும், வடகொரியாவின் நட்பு நாடுகளான சீனாவும், ரஷியாவும் கூட வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அது தொடர்பாக வடகொரியா கருத்து எதுவும் வெளியிடவில்லை.
Advertisement
இதற்கிடையே வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக, அதிபர் கிம் ஜோங் உன் பதவிக்கு வந்து ஓராண்டானதையொட்டி வியாழக்கிழமை அந்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. முன்னாள் அதிபர் கிம் இல் சங்கின் பிறந்தநாளை ஏப்ரல் 15-ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிம் இல் சங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தென்கொரியா உளவுத் துறை தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, நேட்டோ படைத் தலைவர் ஆண்டர்ஸ் ஃபாக் ராஸ்முஸ்ùஸன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தென்கொரியா தலைநகர் சியோல் செல்லவுள்ளனர்.
சவாலை எதிர்கொள்ள தயார்: சர்வதேச நாடுகளின் அறிவுரையைக் கேட்காமல் தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் செயல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போரைத் தூண்டும் வகையில் வடகொரியா பேசி வருவது, அந்நாடு வரம்பை மீறி அபாயக் கோட்டை தாண்ட முயற்சிப்பதையே காட்டுகிறது.
அவர்களது பேச்சும், செயல்பாடும், பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன. வடகொரியா எடுக்கக் கூடிய எந்தவிதமான நடவடிக்கையிலிருந்தும் எங்களையும், எங்களின் நட்பு நாடுகளை பாதுகாத்துக் கொள்ளும் திறன் உள்ளது. எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். வடகொரியா அரசு மற்றும் அதன் அதிபர் கிம் ஜோங் உன்னின் செயல்பாடுகளை கணிக்க முடியவில்லை'' என்றார் சக் ஹெகல்
பேட்டியின்போது முப்படைகளின் தலைவர் மார்ட்டின் டெம்ப்úஸவும் உடனிருந்தார். அவர் கூறுகையில், ""அணு ஆயுதச் சோதனை, ஏவுகணை சோதனைகளை வடகொரியா ஏற்கெனவே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. எனவே, மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் நிலையில் இப்போது இருக்கிறோம்'' என்றார்.