முகப்பு
உலகம்

வேட்புமனு தள்ளுபடி: ஆட்சேபித்து முஷாரப் முறையீடு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், தான் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 12:19 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், தான் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

பாகிஸ்தானில் வரும் மே மாதம் 11-ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போட்டியிட பர்வேஸ் முஷாரப் நான்கு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவற்றில் கராச்சி, கஸýர் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய தொகுதிகளில் முஷாரபின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சித்ரல் தொகுதியில் இவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Advertisement

வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 10-ம் தேதியே கடைசி நாளாகும்.

இந்நிலையில் கஸýர் தொகுதியில் தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் முஷாரப் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். மனுவில், கஸýர் தொகுதியில் எனது மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, அத்தொகுதியிலேயே போட்டியிடும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

வேட்பாளர் சுட்டுக்கொலை: இதனிடையே, பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் முத்தாஹிதா குவாமி இயக்கத் தலைவருமான ஃபக்ருல் இஸ்லாம் வியாழக்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளிகள் தப்பி விட்டனர்.

இஸ்லாம், சிந்து மாகாணத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இச்சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.