முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டுமென்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Updated On : 21 ஜூன் 2013, 11:18 pm IST
பகிர்:

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டுமென்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐ.நா. சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதர் மன்ஜீவ் பூரி பேசியது:

அல்-காய்தா, தலிபான், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டுதான் செயல்படுகின்றன.

Advertisement

Advertisement

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் அங்கு பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த இரு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த பயங்கரவாதச் செயல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆப்கானிஸ்தான் அரசிடமே அந்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பையும் ஒப்படைப்பது முழுமையானதாக இருக்க வேண்டும். அந்நாட்டில் பாதுகாப்பான சூழல் நிலவுவதையும், மனித உரிமைகள் காக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், நிர்வாகத்தை சீராக்குவதிலும் சர்வதேச சமூகம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

பிறநாடுகளின் உதவிகள் இன்றி சிறப்பாக செயல்பட முடியாது என்ற நிலையில்தான் ஆப்கானிஸ்தான் இப்போது உள்ளது என்று அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.