முகப்பு
உலகம்

கனடாவில் வெள்ளம்: 1 லட்சம் மக்கள் தவிப்பு

கனடாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், அப்பகுதியிலிருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Updated On : 21 ஜூன் 2013, 11:17 pm IST
பகிர்:

கனடாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், அப்பகுதியிலிருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அல்பெர்டா பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் அப்பகுதியில் இருந்த வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிலரைக் காணவில்லை.

மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. டிரான்ஸ்-கனடா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மலைப் பகுதிகளில் உள்ள நகரங்களான பன்ஃப் மற்றும் கன்மோர் ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பெü ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் அளவு சனிக்கிழமை குறையும் என்று எதிர்பார்ப்பதாக மீட்புப் படை அதிகாரி தெரிவித்தார்.

வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீடுகளின் மேற்பகுதியில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீட்புப் பணி மேலும் இரு நாள்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.