முகப்பு
உலகம்

கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள பாகிஸ்தானியர்களின் கருப்புப் பண முதலீடு, இந்தியர்களின் முதலீட்டை விட அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.

Updated On : 21 ஜூன் 2013, 11:21 pm IST
பகிர்:

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள பாகிஸ்தானியர்களின் கருப்புப் பண முதலீடு, இந்தியர்களின் முதலீட்டை விட அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி பாகிஸ்தானைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிதி மேலாண்மை நிறுவனங்களின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.9,200 கோடியாக உள்ளது. இது இந்தியர்களின் ரூ.9,000 கோடி முதலீட்டைவிட அதிகம் ஆகும்.

மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தான் மிகச் சிறிய நாடாக இருந்தபோதிலும், கருப்புப் பண முதலீட்டில் இந்தியாவை மிஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

எனினும், பாகிஸ்தானியர்களின் முதலீடு கடந்த ஆண்டில் 32 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இறுதியில் இது ரூ.13,560 கோடியாக இருந்தது. கடந்த 2005ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் பாகிஸ்தானியர்களின் முதலீடு ரூ.19,200 கோடியாக இருந்தது. இது இப்போது பாதியாகக் குறைந்துள்ளது. 2010இல் ரூ.12,500 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.