முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் சாவு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

Updated On : 21 ஜூன் 2013, 11:20 pm IST
பகிர்:

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

பக்துன்கவா மாகாணம், பெஷாவரில் உள்ள குல்ஷன் காலனி ஹுசைனியா மதரஸôவில் வெள்ளிக்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்திருந்த பயங்கரவாதி, மதரஸôவுக்குள் புகுந்து அதை வெடிக்கச் செய்தார். இதில் 15 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலில் மதரஸô கட்டடம் கடும் சேதமடைந்தது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இத்தாக்குதலை அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் வன்மையாக கண்டித்துள்ளனர். ஜர்தாரி கூறுகையில், ""மிகவும் கோழைத்தனமான இது போன்ற செயல்களால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை பலவீனப்படுத்திவிட முடியாது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.