பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் சாவு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
கராச்சி மாநகராட்சி ஆணையரின் வாகனத்தை குறிவைத்து சனிக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டை வைத்த பயங்கரவாதிகள், ஆணையரின் கார் அந்த வழியாக கடந்து சென்றபோது அதனை வெடிக்கச் செய்தனர். இதில் ஆணையருடன் பாதுகாப்புக்குச் சென்ற 8 போலீஸôர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குண்டு வெடித்தது. அங்குள்ள வீடு ஒன்றில் 4 பயங்கரவாதிகள், வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 3 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement