முகப்பு
உலகம்

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: ஒருவர் மரணம்

சீனாவில் ஞாயிற்றுக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.8 பேர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.

Updated On : 2 செப்டம்பர் 2013, 1:06 am IST
பகிர்:

சீனாவில் ஞாயிற்றுக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.8 பேர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.

தென்மேற்கு சீனாவில் உள்ள யுனன் மாகாணம் ஹுஜிங் நகரத்தில் டியான் டாங் எரிபொருள் நிறுவனத்திற்கு சொந்தமான பைலாங்ஷான் நிலக்கரி சுரங்கம் உள்ளது.

இங்கு ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

அப்போது திடீரென வாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். சுரங்கத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று சுரங்க நுழைவு வாயிலில் சிக்கிய 3 பேரை மீட்டனர். மீட்பு படையினர் வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்தி சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.