எகிப்து: முக்கிய ஐ.எஸ். தலைவர் சாவு
எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான அபு ஜாஃபர் அல்-மக்தேசி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான அபு ஜாஃபர் அல்-மக்தேசி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.எஸ். அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் கூறுகையில், இந்த மாதத் தொடக்கத்தில் அல்-மக்தேசி மரணமடைந்ததாகவும், மதப் போருக்காக உயிர்த் தியாகம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. எனினும், எந்த சூழலில் அவர் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அமாக் தெரிவிக்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.