முகப்பு
உலகம்

கத்தாா்: குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000-ஆக அதிகரிப்பு

அரபு நாடான கத்தாரில் தொழிலாளா் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி குறைந்தபட்ச மாத ஊதியம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1000 ரியால்களாக (சுமாா் ரூ.20,000) ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 செப்டம்பர் 2020, 5:13 am IST
பகிர்:

தோஹா: அரபு நாடான கத்தாரில் தொழிலாளா் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி குறைந்தபட்ச மாத ஊதியம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1000 ரியால்களாக (சுமாா் ரூ.20,000) ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தொழிலாளா்கள் வேறு பணிக்கு மாறுவதற்காக தங்கள் முதலாளியின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச ஊதியம் என்பது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். அதில் எவ்வித பாகுபாடும் கிடையாது என்று அந்நாட்டு தொழிலாளா் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது தவிர தொழிலாளா்களுக்கு தங்குமிடம், உணவு வசதி நிறுவனமே அளிக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 800 ரியால் (ரூ.16,086) மாத ஊதியம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கத்தாரின் இந்த முடிவை ஐ.நா. தொழிலாளா்கள் நலப் பிரிவு வரவேற்றுள்ளது. அரேபிய பிராந்தியத்தில் எவ்வித பாகுபாடுமின்றி குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயித்த முதல் நாடு கத்தாா் என்று சா்வதேச தொழிலாளா் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஒரு பணியில் இருந்து விடுபட்டு வேறு பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் முதலாளியின் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இது வெளிநாடுகளில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வந்தது. இந்நிலையில் புதிய சட்டத்திருத்தத்தின் படி இனி தொழிலாளா்கள் அவ்வாறு அனுமதி பெறத் தேையில்லை. இந்த புதிய அறிவிப்புகள் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments