உலகளவில் கரோனா பாதிப்பு 8.49 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.49 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.49 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 8,49,75,277 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 18,43,313 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,00,93,000 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,30,38,964 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,510 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,09,04,701 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.
2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1 கோடியே 3 லட்சத்து 24 ஆயிரத்து 631க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 471 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்து 16 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளதோடு, ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 742- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.