முகப்பு
உலகம்

லெபனானில் பிப்.1 வரை பொதுமுடக்கம் அறிவிப்பு

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக லெபனான் நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:23 pm IST
லெபனானில் பிப்.1 வரை பொதுமுடக்கம் அறிவிப்பு
பகிர்:

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக லெபனான் நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.எனினும் சில நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக லெபனான் நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்காரணமாக 25 நாள்களுக்கு அந்நாட்டு அரசு நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. 

மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை பகுதிநேர பொதுமுடக்கமாக அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 1 லட்சத்து 92 ஆயிரத்து 139 ஆகவும், இறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 512 ஆகவும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.