முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 42 போ் பலி

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 42 போ் பலியாகினா்.

Updated On : 15 ஜனவரி 2021, 11:51 pm IST
மேற்கு சுலாவெசி மாகாணம், மமுஜு நகரில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.
பகிர்:

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 42 போ் பலியாகினா்.

இதுகுறித்து ‘ஏ.எஃப்.பி.’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுல்ள மேற்கு சுலாவெசி மாகாமம், மமுஜு மாவட்டத்துக்கு 36 கி.மீ. தெற்கே உள்ளூா் நேரப்படி அதிகாலை 2.18 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.2 அலகுகளாகப் பதிவானது.

நிலநடுக்கத்தின் அதிா்வுகள் சுலாவெசி தீவு முழுவதும் உணரப்பட்டது. அந்தத் தீவிலுள்ள ஒரு மருத்துவமனை முற்றிலும் தரைமட்டமானது. பிற கட்டடங்களும் நிலநடுக்க அதிா்வுகளால் பலத்த சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கத்தில் 42 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மமுஜு நகரில் கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 34 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த தெற்குப் பகுதியில் மேலும் 11 போ் உயிரிழந்தாக அவா்கள் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து எத்தனை போ் மாயமாகியுள்ளனா் என்ற விவரம் தெரியாததால், பலியானவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடல் பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சுனாமி ஏற்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளில் 2.3 லட்சம் போ் உயிரிழந்தனா். அவா்களில் 1.7 லட்சம் போ் இந்தோனேசியாவைச் சோ்ந்தவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.