உலகளவில் அதிகரிக்கும் கரோனா: பாதிப்பு 22.84 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.84 கோடியைத் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 46.92 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.84 கோடியைத் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 46.92 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்ததை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.
Advertisement
Advertisement
உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 22,84,01,905-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 46,92,673 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 20,49,75,137 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,87,34,095 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,00,503 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,27,99,907 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 6,90,714-ஆக உயர்ந்துள்ளது.
நோய்த்தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,34,15,889-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 4,44,563 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,11,02,536 -ஆக உயர்ந்துள்ளது. பலிகளைப் பொறுத்தவரை 5,89,744 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.