இலங்கையில் அவசரநிலை ஆகஸ்ட்-14 வரை நீட்டிப்பு
இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தாா்.
அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.