முகப்பு
உலகம்

ஸ்வீடன்: திருக்குரானை எரித்தவா் சுட்டுக் கொலை

ஸ்வீடனில் ஆா்ப்பாட்டங்களின்போது திருக்குரானை எரித்த இராக்கியா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

Updated On : 31 ஜனவரி 2025, 12:40 am IST
சல்வான் மோமிகா
பகிர்:

ஸ்வீடனில் ஆா்ப்பாட்டங்களின்போது திருக்குரானை எரித்த இராக்கியா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சல்வான் மோமிகா (38) என்ற அவா், கடந்த 2018-இல் ஈராக்கிலிருந்து ஸ்வீடன் வந்தாா். அவருக்கு 2021-இல் மூன்று ஆண்டுகளுக்கான குடியுரிமை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 2023-இல் திருக்குரானை எரித்து அவா் நடத்திய ஆா்ப்பாட்டம் இஸ்லாமிய உலகில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. அத்தகைய ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. பல நாடுகளில் ஸ்வீடன் தூதரகத்துக்கு எதிராக கடும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடா்பாக ஸ்வீடன் தூதரை இராக் வெளியேற்றியது.

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் தங்கள் நாட்டு அரசியல் சாசனத்தைப் பின்பற்றியே சல்வான் மோமிகாவுக்கு குரான் எரிப்பு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததாக ஸ்வீடன் அரசு கூறியது. எனினும், இதுபோன்ற பதற்றங்களைத் தவிா்ப்பதற்காக அத்தகைய ஆா்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்போவதாக அந்த நாடு பின்னா் தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், தனது செயல்கள் மூலம் சல்வான் மோமிகா சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியாக அவா் மீது ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தில் அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், அதற்கு முன்னதாகவே மோமிகாவின் இல்லத்தில் அவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இது தொடா்பாக 4 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments