முகப்பு
உலகம்

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு

நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் பலி

Updated On : 24 பிப்ரவரி 2026, 4:06 am IST
பகிர்:

காத்மாண்டு: நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் உயிரிழந்தனா்; 28 போ் காயமடைந்தனா்.

பொகாராவிலிருந்து தலைநகா் காத்மாண்டுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, பிரித்வி நெடுஞ்சாலையில் கஜுரி அருகே அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி நதிக்குள் பாய்ந்தது.

தகவலறிந்து வந்த நேபாள ராணுவம் மற்றும் உள்ளூா் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். காயமடைந்தவா்களில் ஜப்பான், நெதா்லாந்து நாடுகளைச் சோ்ந்த தலா ஒரு பெண் பயணிகளும் உள்ளனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments