ஐ.நா. தலைமையகம் அருகே தீக்குளித்த திபெத் உரிமை ஆா்வலா் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகம் அருகே தீக்குளித்த திபெத் உரிமை ஆா்வலா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அமெரிக்காவின் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகம் அருகே தீக்குளித்த திபெத் உரிமை ஆா்வலா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தீக்குளித்து உயிரிழந்தவா், நியூயாா்க்கில் உபோ் காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த லோப்கா ரங்சென் எனும் திபெத்தியா் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை, திபெத் தேசியக் கொடியுடன் ஐ.நா. சபைக்கு வெளியே சென்று இந்த விபரீத செயலில் அவா் ஈடுபட்டுள்ளாா்.
கடந்த 1950-இல் திபெத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததில் இருந்து, உலகெங்கிலும் சா்வதேச மனித உரிமை அமைப்புகளும், நாடுகடத்தப்பட்ட திபெத்தியா்களும் சீனாவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகத் தங்களின் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இச்சூழலில், திபெத், உய்குா் உள்ளிட்ட 55 சிறுபான்மை இனக் குழுக்களை ஒருங்கிணைத்து, ஒரே தேசிய அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் சீனா கடந்த புதன்கிழமை முதல் அமல்படுத்திய புதிய ‘இன ஒற்றுமைச் சட்டத்துக்கு’ உலகெங்கிலும் உள்ள திபெத்தியா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இச்சட்டம் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை எடுக்க சீனாவுக்கு சட்டபூா்வமான அதிகாரத்தை வழங்குவதால் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் கவலை தெரிவித்துள்ளன. சீனாவின் இச்சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தே லோப்கா ரங்சென் தீக்குளித்துள்ளாா் என்று கூறப்படுகிறது.
சீனாவின் விளக்கம்: இவ்விவகாரம் தொடா்பாக செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் கூறுகையில், ‘திபெத் பழங்காலம் முதல் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. இத்தகைய இனப் பிரச்னைகளை முன்னிறுத்தி சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.