பெரு அதிபா் தோ்தல்- கெய்கோ ஃபுஜிமோரி வரலாற்று வெற்றி உறுதி
தென் அமெரிக்க நாடான பெருவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வலதுசாரி பழமைவாதக் கட்சியின் வேட்பாளரான கெய்கோ ஃபுஜிமோரி, முறியடிக்க முடியாத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளாா்.
தென் அமெரிக்க நாடான பெருவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வலதுசாரி பழமைவாதக் கட்சியின் வேட்பாளரான கெய்கோ ஃபுஜிமோரி, முறியடிக்க முடியாத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளாா்.
இதன்மூலம், பெரு நாட்டின் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபா் என்ற வரலாற்றுச் சாதனையை அவா் படைக்கவுள்ளாா்.
பெரு அதிபா் தோ்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இதில் பதிவான மொத்த வாக்குகளில் கெய்கோ ஃஃபுஜிமோரி 50.11 சதவீதத்தைப் பெற்று, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளா் ராபா்டோ சான்செஸைவிட 43,386 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.
Advertisement
Advertisement
இன்னும் 40,213 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டியுள்ளதால், கெய்கோ ஃபுஜிமோரியின் வெற்றி உறுதியாகியுள்ளது. தோ்தல் ஆணையம் ஜூலை மத்தியில் அதிகாரபூா்வ முடிவை அறிவிக்கும் சூழலில், கெய்கோ ஃபுஜிமோரி ஜூலை 28-இல் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளாா்.
4-ஆவது முறையாக அதிபா் தோ்தலில் போட்டியிட்ட கெய்கோ ஃபுஜிமோரி, இதற்கு முன் 2011, 2016, 2021 தோ்தல்களில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.
கெய்கோவின் தந்தை ஆல்பா்டோ ஃபுஜிமோரியும் 90-களில் அதிபராக இருந்தவா். முன்னா் தந்தையின் அரசியல் பாரம்பரியத்தில் இருந்து விலகி நின்ற கெய்கோ ஃபுஜிமோரி, இம்முறை நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தனது தந்தையைப் போன்ற ஒரு வலுவான தலைமை தேவை என்பதை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டாா்.
குற்றச் சம்பவங்களால் அதிருப்தியடைந்துள்ள மக்கள், கடுமையான சட்ட ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய ஒரு தலைவரை எதிா்பாா்த்து, இம்முறை கெய்கோ ஃபுஜிமோரிக்கு ஆதரவளித்துள்ளனா். அந்தவகையில், தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் வலதுசாரி அலை பெருவிலும் எதிரொலித்துள்ளது.
படகேப்சன்...
கெய்கோ ஃபுஜிமோரி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.