மூன்று பெண்களுடன் தகாத உறவு.. ஆனால்: ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ்!
மூன்று பெண்களுடன் தகாத உறவில் இருந்தேன், ஆனால் எப்ஸ்டீன் இது குறித்து என்னை மிரட்டவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் பில் கேட்ஸ்!
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தன்னுடைய வாழ்வில் குறைந்தது மூன்று பெண்களுடன் தகாத உறவில் இருந்ததை, அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகி பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் ரகசிய விசாரணையில் ஆஜராகி பில் கேட்ஸ் பல கேள்விகளுக்கு விளக்கமளித்திருக்கிறார்.
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கூடுதல் ஆவணங்களின் அடிப்படையில் பில் கேட்ஸ் தானாக முன்வந்து குழுவின் முன் ஆஜராகி சாட்சியம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
ரஷியாவைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை, அணு இயற்பியலாளர், மருத்துவ தொழிலபதிர் என மூன்று பெண்களுடன் தான் தொடர்பில் இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் தொடர்பில் இருந்த பெண்களுக்கும், எப்ஸ்டீனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அவர்களுடனான தொடர்பு முறிந்தபிறகே அவர்களைப் பற்றி எப்ஸ்டீனுக்குத் தெரிய வந்தது என்றும் பில் கேட்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு எப்ஸ்டீன் எழுதிய மின்னஞ்சல் ஒன்றில், பில் கேட்ஸ் மற்றும், மற்றொரு பெண்ணுக்கும் இடையேயான தொடர்பைக் குறிப்பிட்டு மிரட்டும் தொனி இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், எப்ஸ்டீன் ஒருபோதும் தன்னை மிரட்டவில்லை, தன்னுடைய கூற்றுகளை ஆமோதிக்க வைக்கும்படியான பாணி அந்த மின்னஞ்சலில் இருந்ததாகவும் குறப்பிட்டுள்ளார்.
தன்னுடைய அறக்கட்டளைக்கு மிக முக்கிய பிரமுகர்களிடமிருந்து நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றுத் தருவதாகவே எப்ஸ்டீன் அறிமுகமாகியிருக்கிறார். அவருடன் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே தான் கொண்டிருந்ததாகவும் ஆனால் அப்போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்தே இருந்தேன் என்றும் கூறுகிறார் அவர்.
Illicit relationships with three women... but: Bill Gates admits it!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.