அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகமும், டால்மியா சிமென்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய உலகத் தாய்ப்பால் வார விழா ஓட்டக்கோவில் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரியலூர் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் தமிழரசி தலைமை வகித்துப் பேசும் போது: தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் போதிய நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளர்வதோடு மட்டுமல்லாமல் தாயுடன் ஒரு பாசப் பிணைப்புடன் வளர்கிறது. தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார்.
நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு ஏதுவான உணவு வகைகள் தயாரிப்பது பற்றி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கிய குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டு சிறந்த குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டால்மியா சிமென்ட் நிறுவனம் மூலம் இரும்பு மற்றும் புரதச்சத்து மருந்துகள் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹோப் நிறுவன அரும்பு செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இனி குரல் மூலம் போட்டோ எடுக்கலாம்! ஐபோன் கேமராவில் புதிய ஏஐ வசதி!

கரூர் பலி: பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! எப்போது?

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கையில்... அரசிற்குக் கோரிக்கை வைத்த இயக்குநர் சீனு ராமசாமி!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


