அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் தமிழக அரசின் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கடுகூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கொவைட் -19 தடுப்பூசி போடும் பணியை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தொடக்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை, குமிழியம் மற்றும் கடுகூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மையங்களில் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக 2,046 அரசுப் பணியாளா்கள், 1,036 தனியாா் பணியாளா்கள் என மொத்தம் 3,082 சுகாதாரப் பணியாளா்களுக்கு கொவைட் -19 தடுப்பூசி போடப்படுகிறது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக மருத்துவ அலுவலா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் என 443 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்வுக்கு, ஆட்சியா் த.ரத்னா, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



