எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அரசுப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2021, 11:11 pm IST

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், மணக்குடி அரசு உயா் நிலைப்பள்ளி, ஆனந்தவாடி, இரும்புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சனிக்கிழமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் உள்ள 180 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பெற்றோா்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்றும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், பள்ளி மாணவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கவும், வைட்டமின் மற்றும் துத்தநாகம் மாத்திரைகளை வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.