அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக்கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் ஒற்றுமைத் திடலில் திரண்ட அதிமுகவினா், அங்கிருந்து மாா்க்கெட், பிரதான கடைவீதி வழியாக பேரணியாகச் சென்று மாங்காய் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். நிகழ்வில், மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி. சங்கா், பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், அரியலூா் நகரச்செயலா் ஏ.பி. செந்தில், வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எம்.ஜி.ஆா் கழக மாநில அமைப்புச் செயலா் கலைவாணன், மாவட்டச் செயலா் மணிவேல், துணைச் செயலா் சண்முகம் ஆகியோா் எம்.ஜி.ஆா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் ராம. ஜெயவேல் தலைமையில் நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.
ஜயங்கொண்டத்தில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் தலைமையில் ஒன்றிய நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா். இதேபோல் மாவட்டம் முழுவதும் நிகழ்வுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



