பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

துர்கா - லட்சுமி யோகம்! 

என் தம்பி மகள் பிளஸ் 2 காமர்ஸ் பிரிவு படித்து வருகிறார். பட்டப் படிப்பு, வேலை அவருக்கு எவ்வாறு அமையும்? ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு சிறப்பான பலம் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN

என் தம்பி மகள் பிளஸ் 2 காமர்ஸ் பிரிவு படித்து வருகிறார். பட்டப் படிப்பு, வேலை அவருக்கு எவ்வாறு அமையும்? ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு சிறப்பான பலம் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். குருவின் பார்வை கல்வி வீட்டின் மீது படிகிறது சிறப்பென்றாலும் ராகு பகவான் நாலில் இருப்பது குறையா? சனியின் பார்வை குருவின் மீது விழுகிறது. காலசர்ப்பதோஷமா? பரிகாரம் பற்றி கூறவும். 

வாசகர், நடுத்திட்டு.

உங்கள் சகோதரர் மகளுக்கு மகர லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதியான சனி பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவானும் ஆறாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். சூரிய, சனி பகவான்கள் குரு பகவானின் சாரத்தில் இணைந்திருப்பது சிறப்பு. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுய சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். சுகாதிபதி, லாபாதிபதியான செவ்வாய் பகவானும் களத்திர நட்பு ஸ்தானத்தில் புதன் பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். ஒரு கேந்திராதிபதி, ஒரு திரிகோணாதிபதி ஆகிய இருவரும் திரிகோணாதிபதியின் சாரத்தில் ஒன்றாக இணைந்திருப்பதும் சிறப்பு. 

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை அயன ஸ்தானமான தன் மூலத்திரிகோண வீடான தனுசு ராசியையும், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானமான கல்வி ஸ்தானத்தையும் அங்கு சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார். குருபகவானின் பார்வை கல்வி ஸ்தானத்தின் மீது படிவதால் மேன்மை உண்டாகும் என்று புரிந்துகொள்ள வேண்டும். களத்திர நட்பு ஸ்தானாதிபதி சந்திர பகவான், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். பூர்வ புண்ணியம், தொழில் ஸ்தானம் ஆகிய திரிகோண கேந்திர வீடுகளுக்கு அதிபதி, மகர லக்னத்திற்கு யோக காரகரான சுக்கிரன் பகவான் ஐந்தாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். சந்திர, சுக்கிர பகவானின் இணைவு துர்கா லட்சுமி யோகமாகும். சந்திர பகவான் அம்பாளின் அம்சமாகக் கருதப்படுவதால் துர்க்கையின் பெயரில் இந்த யோகம் குறிக்கப்பட்டது என்று புரிந்துகொள்ள வேண்டும். அதோடு இந்த யோகம் புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் உண்டாவதும் உன்னதமாகும். அவரை காமர்ஸ் படிப்புடன் காப்பீட்டுக் கணக்காளர் படிப்பு (ஆக்சுவரி), காப்பீட்டு ஒப்புறுதியாளர் (அண்டர்ரைட்டர்) பிரிவிலும் சேர்த்து படிக்கச் சொல்லவும். லக்னம், ராகு/கேது கட்டுக்குள் அடங்காததால் காலசர்ப்ப தோஷம் உண்டாகாது. சனி பகவானின் மூன்றாம் பார்வை குரு பகவானின் மீது படிவது நன்மையே. பிரதி புதன் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரச் சொல்லவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.