மேற்கு வாசல் வீடு யோகமா? தோஷமா?

மேற்கு திசை ஒருவரது வாழ்வில் ஏற்றத்தைத் தருமா? என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
வாஸ்து
வாஸ்து
Published on
Updated on
3 min read

ஒரு வீட்டின் மனை மற்றும் கட்டட அமைப்பு நூறு சதவீதம் வாஸ்து முறைப்படி அமைவது கடினம். நல்ல வாஸ்து மற்றும் அம்சமுள்ள வீடு அமைந்தால் அந்த குடும்பத்தில் நல்ல நேர்மறை ஆற்றல் வெளிப்படுத்தும். அந்த ஆக்க சக்தி பல்வேறு நற்பலன்களைத் தரவல்லது. ஒரு குடும்பத்தின் தலைமை ஆதிக்கம் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்த்து அதற்கேற்ப திசையில் அதிக கவனம் செலுத்தி வாஸ்து முறைப்படி வீடு கட்ட வேண்டும். ஒருவருக்கு ஜாதகத்தில் கிரக அமைப்பு நன்றாக இருந்தாலும், அவர் இன்னும் மேன்மை அடைய வாஸ்து மிக முக்கியமான ஒன்று. 

மேற்கு வாசல் வீடு மேன்மை தருமா? அனைவரும் வடக்கு மற்றும் கிழக்கு வாசல் வீடுகளை வாங்க விரும்புவார்கள். மேற்கு திசைகளை அதிகமாக வாங்க ஆர்வம் காட்டமாட்டார்கள். மேற்கு திசையில் சூட்சுமங்கள் உயர்வுகள் அதிகம் உண்டு. மேற்கு திசை என்பது சனியின் ஆதிக்கம் கொண்ட வீடு என்பதால் இந்த திசையில் உள்ள மனையை விரும்பமாட்டார்கள். மேற்கு திசை என்பது ஒரு ஆணின் வளர்ச்சி, புகழ், மேன்மை பன்மடங்கு பெருகும் தன்மை கொண்டது. சனி என்பவர் கெட்டவர் அல்ல, அவர் நல்ல வழிகாட்டி மற்றும் சிறந்த ஆசான். ஒரு மனிதன் கண்ணிமைக்கும் நேரத்தில் உயர்வு பெற சனி பகவானால் மட்டுமே உதவ முடியும். முக்கியமாக ஒரு ஆணின் திடீர் பணக்கார யோகம், அரசியலில் உயர்வு, தொழிலில் உச்சம், மற்றவர் பாராட்டும் அளவு புகழ் என்ற சாதனை மேற்கு மனைக்கு பலம் உண்டு. இந்த திசை பலம் என்பதால், அதற்கு ஏற்ப வாஸ்து முறைப்படி வீடு அமைய வேண்டும். சில முக்கிய அடிப்படை விஷயங்களையாவது வீடு வாங்கும் முன்பு பார்க்க வேண்டும்.

வாஸ்து
தனிஷ்டா பஞ்சமியும், பரிகாரமும்!

ஒருவரின் ஜாதகத்தில் சனி வலுத்து அல்லது சனியின் ராசி/லக்கினம் கொண்டவராக இருந்தால் இந்த மேற்கு திசை அதிக நன்மை தரவல்லது. ஒரு வீட்டின் மனை அமைப்பு சதுரமாக இருந்தால் முதல் தரமான வீடு என்றும் அதுவே செவ்வக வடிவத்தில் உள்ள மனை இரண்டாம் தரமாகவும் சொல்லப்படுகிறது. இதுதவிர ஒரு வீடு கோணல் மற்றும் ஓரங்கள் வெட்டு இருந்தால், அந்த வீட்டில் சுகம் இருக்காது. கடவுளால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களுடன் எட்டு திசையும் பறைசாற்றும் இந்த வாஸ்து வடிவமைப்பு. கிழக்கு (இந்திரன்), மேற்கு (வருணன்), வடக்கு (குபேரன்), தெற்கு (எமன்) ஆகிய 4 திசைகள் தவிர, வடக்கும் கிழக்கும் இணையும் வடகிழக்கு (ஈசான்யம்- நீர்), கிழக்கும் தெற்கும் இணையும் தென் கிழக்கு (அக்னி - நெருப்பு), தெற்கும் மேற்கும் இணையும் தென் மேற்கு (நிருதி- நிலம்), மேற்கும்– வடக்கும் இணையும் வடமேற்கு (வாயு- காற்று) ஆகிய 8 திசைகளும் அஷ்டதிக்கு பாலகர்களின் பார்வை இருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து மூலைகள் பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம் மற்றும் ஆகாய (பிரம்மஸ்தானம்) தத்துவத்தில் இயங்கும். இவற்றைக் கொண்டுதான் வீட்டின் அமைப்பு அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் முடிந்த வரை சிறிது வாஸ்து திசைகளும் அவற்றின் பலன்களும் தெரிந்துகொள்வது நன்று. 

வாஸ்து
குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

முதலில் நாம் பார்ப்பது தலைவாசல்: மேற்கு பார்த்த வீட்டிற்கு மேற்கு அதாவது வடமேற்கு பகுதி உச்சமாகவும் தென்மேற்கு நீச்சமாக சொல்லப்படுகிறது. அதனால் உச்ச ஸ்தானமான வடமேற்கு பகுதியில் நுழைவாயில் கதவுகளை வைக்க வேண்டும். இது செல்வம் வரும் வழி மிகவும் முக்கியமான ஒன்று. வடக்கு பக்கமாக நடந்து பிறகு மேற்கு திசை நோக்கி திரும்பி வீட்டிற்குச் செல்வது நல்லது. சூரியன் ஒளிக்கதிர்கள் வீட்டில் படுமாறு கதவின் எதிர்த் திசையில் கிழக்கு புறம் பெரிய கதவோ / ஜன்னலோ வைப்பது நல்லது. கிழக்கு பக்கமாக வரும் காலை சூரியன் வீட்டில் நேர்மறை சக்தி அதிகப்படுத்தும் மற்றும் நம்முடைய உடலை சுறுசுறுப்பாக மாற்றும் தன்மைக் கொண்டது. சூரிய ஒளியால் வரும் அதிக வைட்டமின் டி நம் உடலுக்கு நல்லது. கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஜன்னல் கதவு உள்ள வீட்டின் தலைவனுக்கு வெளி நபர்களால் உதவி கிட்டும். நாம் காலை எழுந்தவுடன் கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருக்கும் ஜன்னலை முதலில் திறந்த பிறகு தான் மேற்கு பார்த்த கதவு திறப்பது நன்று. மேற்கு மற்றும் தெற்கு உயரமாக இருக்க வேண்டும் தாழ்வாக இருக்கக்கூடாது. மற்ற திசையை விட வடக்கு கிழக்குப் பகுதி அதிக காலி இடம் வைத்து வீட்டைக் கட்ட வேண்டும். வடமேற்கு தென்கிழக்கு, தென்மேற்கு திசை வளரக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமான மூலைகள் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு.

முக்கிய ஆணிவேர் எனப்படும் வடகிழக்கு மூலை, இந்த திசையில் தான் அதீக காந்த ஆற்றல் உள்ளே வரும் பகுதி. வாஸ்து பகவானின் தலை மற்றும் மூளை பாகம் இங்கு அமைந்துள்ளது. எந்த திசை வீடாக இருந்தாலும் இங்கு அதீக கவனம் செலுத்த வேண்டும். இங்கு கிணறு, நிலத்தடி நீர்த் தொட்டி, பெரியவர்கள் படுக்கும் அறை, பூஜை அறை, படிக்கும் அறை மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம், வரவேற்பு அறை அமைப்பது சிறந்தது. இங்கு படிக்கட்டு, கழிவு தொட்டிகளோ, இளம் தம்பதியர் அறை, பலுவான அலமாரிகளோ, அசுத்தமான பொருள்களோ இங்கு வைக்கக்கூடாது. 

வாஸ்து
கரணம் தப்பினால் மரணம் என்பார்கள்: கரண சூட்சுமம் தெரியுமா?

அதற்கு அடுத்த முக்கிய திசை தென்மேற்கு என்கிற குபேரன் மூலை ஆகும். வாஸ்துவின் கால் பதியும் இந்த திசை அதிக பலம் பொருந்திய இடம். ஒரு தலைவன் தலைவி படுக்கையறை இங்கு அமைப்பது முதல் தரமானது. அதிக பலுவான பொருள்கள், முக்கிய பத்திரம் மற்றும் பண பெட்டகம், நிலைப்பேழை, மேல்நிலை தொட்டி இந்த திசையில் வைக்கலாம். தென்மேற்கில் பள்ளம், கிணறு, செப்டிக் டேங்க், கழிப்பறை, விருந்தினர் அறை, சமையல் அறை, ஹால், மின்சார சம்பந்த பொருள், உள்படிக்கட்டு வராமல் பார்த்துக் கொள்ளவும். இங்கு தம்பதியர் உறங்கும் இடம் என்பதால் இங்கு பூஜை அறை வரக்கூடாது. கட்டில் மற்றும் அலமாரிகள் தெற்கு மேற்கு சுவர்களை ஒட்டி அமைத்துக் கொள்ளலாம். உயரமான மரங்கள் தென்மேற்கில் வைக்கலாம்.

தென்கிழக்கில் சமையலறை வைப்பது மிகவும் சிறந்தது. இதுதவிர மின்சாதன பொருள்கள், வரவேற்பறை இங்கு வைக்கலாம். இங்கு படுக்கையறை, கழிப்பறை வருவதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள பெண்ணிற்கு நோய் அதிகம் ஏற்படுகிறது என்றால் தென்கிழக்கு பகுதியை உற்று நோக்க வேண்டும். மற்ற திசையில் வைக்க முடியாததை வடமேற்கு திசையில் வைக்கலாம். வடமேற்கு சமையல் அறை (இரண்டாம் பட்சமாக), இரண்டாவது படுக்கையறை, கழிப்பறை, குளியலறை வைக்கலாம். சமையலறை பக்கத்தில் கழிப்பறை வரக்கூடாது. இதுதவிர தெற்கு, மேற்கு மத்திய பகுதியில் கழிவறை வைக்கலாம். கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி கழிவறை கோப்பைகள் அமைக்கக்கூடாது.

வாஸ்து
உயிர்க்கொல்லி நோய்: என்ன சொல்கிறது மருத்துவ ஜோதிடம்?

மேற்கு திசை வீடு அமையப்பெற்ற ஆண்கள் குறிக்கோள் கூடிய வைராக்கியம் மற்றும் பிடிவாதம் கட்டாயம் இருக்கும். இதனால் தன்னுடைய குறிக்கோள் மற்றும் தொழில் முயற்சி வெற்றிக்கிட்டும். மேலே சொன்ன அடிப்படை வாஸ்து அனைத்தும் சரியாக இருந்தால் மேற்கு திசை உயர்வைத்தான் தரும். இன்னும் வாஸ்துப்படி ஒரு வீட்டின் உச்ச சன்னல்/கதவு, வாகனம் நிறுத்தும் இடம், வெளிப்பகுதி அமைப்பு, போர்ட்டிக்கோ, பால்கனி, உள் / வெளி படிக்கட்டு, அலமாரிகள், நிறங்கள் மற்றும் அதிக சூட்சுமங்கள் உள்ளே புதைந்துள்ளன. வாஸ்து என்பது கடல் போன்றது, அவற்றில் மேற்கு திசை வீட்டில் அடிப்படை வாஸ்து கடுகளவு தான் பார்த்தோம். தற்பொழுது அனைவரும் கட்டிய அபார்ட்மெண்ட் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டை முடிந்தவரை வாஸ்து அமைப்பு ஓரளவு பார்த்து வாங்குவது அல்லது வாடகைக்குப் போவது நன்று. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com