காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்! வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 6

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

enkanitha palangal
Published On :

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த வாரம் சுயமாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும்.

பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.

சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு  இருக் கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு செயல் திறன் கூடும். மாணவர்களுக்கு: பாடங்களை மனநிறை வுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். 

பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி பூஜை செய்து அம்மையை வணங்க பிரச்சனைகள் தீரும். பண கஷ்டம் தீரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.