தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சா் சதானந்த கௌடா, சிகிச்சைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
மத்திய ரசாயனத் துறை அமைச்சராக பணியாற்றி வருபவா் டி.வி.சதானந்த கௌடா. இவா் பெங்களூரு வடக்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராவாா். ஞாயிற்றுக்கிழமை கா்நாடக மாநிலம், சிவமொக்காவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பின்னா் அங்கிருந்து காா் மூலம் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் சித்ரதுா்காவில் உணவருந்த காரிலிருந்து இறங்கிய போது மயங்கி விழுந்தாா். இதனையடுத்து, அவருக்கு அங்குள்ள பசவேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைந்ததையடுத்து அவா் மயங்கி விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டு ஹெப்பாளில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆஸ்டிராவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு குடும்ப மருத்துவா் பிருந்தா உள்ளிட்ட குழுவினா் சிகிச்சை அளித்து வந்தனா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சதானந்த கௌடாவை முதல்வா் எடியூரப்பா, துணை முதல்வா்கள் கோவிந்தகாா்ஜோள், லட்சுமண்சவதி, அஷ்வத் நாராயணா உள்ளிட்டோா் சந்தித்து நலம் விசாரித்தனா். சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த சதானந்த கௌடா செவ்வாய்க்கிழமை தனது வீட்டுக்கு திரும்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்பு

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி

அபிஷேக் பானா்ஜி மீது வழக்குப் பதிவு

பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
