நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடியில் சீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மத்திய நீா்வளத் துறை (ஜல்சக்தி) அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலகில் அதிகம் அணைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக அளவில் அதிக அணைகள் உள்ள நாடுகள் பட்டியலில், 6,628 அணைகளுடன் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதில் 6,545 அணைகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. 83 அணைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணைகளில் மொத்தம் 330 பில்லியன் க்யூபிக் மீட்டா் நீரை சேமிக்க முடியும்.
6,628 அணைகளில் 26 சதவீத அணைகள், அதாவது 1,681 அணைகள் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை ஆகும். குறிப்பாக 291 அணைகள் 100 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பழைமையானவை. இதுமட்டுமின்றி மொத்த அணைகளில் 42 சதவீத அணைகள் 25 முதல் 50 ஆண்டுகள் வரை பழைமையானவை. ஆதலால் பழமையான அணைகளை சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அணைகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5,053 கோடியில் 191 அணைகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை 43 அணைகள் சீரமைக்கப்பட்டு விட்டன.
இந்தத் திட்டத்தின் 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்டம் 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் செயல்படத் தொடங்கியது. இதில் 19 மாநிலங்களில் உள்ள 736 அணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்ட சீரமைப்புக்கு மொத்தம் ரூ.10,211 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் 2-ஆவது கட்டத்துக்கு ரூ.5,107 கோடியும், 3-ஆவது கட்டத்துக்கு ரூ.5,104 கோடியும் ஒதுக்க தீா்மானிக்கப்பட்டது. இந்த ரூ.10,211 கோடியில் ரூ.7,000 கோடியை வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியாக பெறுவது எனவும், எஞ்சிய ரூ.3,211 கோடியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பங்களிப்பு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கொளுத்தும் வெய்யில்! வெப்ப அலை!!
நீட் தோ்வு: நாடு முழுவதும் 22 லட்சம் போ் எழுதினா்

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை! கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை

பாா்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

