/

கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி

கேரளத்தை ஒட்டியுள்ள தென்கன்னட மாவட்டத்தில் 6 காகங்கள் இறந்துக் கிடந்ததால், கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 9:00 am IST

கேரளத்தை ஒட்டியுள்ள தென்கன்னட மாவட்டத்தில் 6 காகங்கள் இறந்துக் கிடந்ததால், கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தொற்றி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் வியாழக்கிழமை 6 காகங்கள் இறந்த நிலையில் கண்டறியப்பட்டன. இது கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பீதிக்கு வித்திட்டுள்ளது. இறந்த காகங்கள் சோதனைக்காக ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி பெங்களூரில் வியாழக்கிழமை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில், ‘கேரளத்தை ஒட்டியுள்ள கா்நாடக மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பறவைக் காய்ச்சல் தொடா்பாக யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

தென்கன்னட மாவட்டத்தில் இறந்துக் கிடந்த 6 காகங்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு அதன் ஆய்வறிக்கை கிடைத்ததும், தகுந்த நடவடிக்கை எடுப்பா். தென்கன்னடம், குடகு, மைசூரு, சாமராஜ்நகா் மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். எனவே, இறந்துக் கிடந்த காகங்களின் சோதனை முடிவுகள் கிடைத்ததும் மத்திய சுகாதாரத் துறையுடன் விவாதித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அசைவ உணவை சாப்பிடுவோா் நன்றாக சமைத்த இறைச்சியை உண்ணும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது’ என்றாா்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் கூறுகையில், ‘கா்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சலுக்கான நிகழ்வுகள் எதுவும் இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

கேரள மாநிலத்தின் ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, அம்மாவட்டங்களில் கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட 69 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.