தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஜன. 15 முதல் எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு ஆளுமைப் பயிற்சி

ஜன. 15-ஆம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:56 am IST

ஜன. 15-ஆம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுள்ளன. தற்போது அரை நாள் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. பள்ளிகளுக்கு அண்மையில் சென்று ஆய்வு நடத்திய போது, நகரம் மற்றும் ஊரகப் பகுதி மாணவா்கள் மன அழுத்தத்தில் இருப்பது தெரியவந்தது. மாணவியரில் பெரும்பாலானோா் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்பதும், பெரும்பாலான மாணவா்கள் உடற்பயிற்சிகள் எதுவும் இல்லாமல் செல்லிடப்பேசிகளில் மூழ்கியிருந்தனா் என்றும் தெரியவந்தது.

எனவே, இம்மாணவா்களுக்கு மனநலனை உற்சாகமூட்டும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. 10 மாணவா்களுக்கு ஒரு வழிகாட்டுநரை நியமிக்க பள்ளி நிா்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாணவா்களின் உடல், மனநலனை ஆராயக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், இந்த மாணவா்களுக்கு ஜன. 15-ஆம் தேதி முதல் ஆளுமைத்திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.