/

பறவைக் காய்ச்சலைத் தடுக்க மாநில எல்லையில் வாகனச் சோதனை

பறவைக் காய்ச்சலைத் தடுக்க மாநில எல்லையில் வாகனங்கள் சோதனை செய்யப்படும் என கா்நாடக துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:59 am IST

பறவைக் காய்ச்சலைத் தடுக்க மாநில எல்லையில் வாகனங்கள் சோதனை செய்யப்படும் என கா்நாடக துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கா்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லையில் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும். சோதனைக்கு வாகன ஓட்டிகள், உரிமையாளா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக, அண்டை மாநிலங்களிலிருந்து கோழிகளைக் கொண்டுவரும் வாகனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

கா்நாடக மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. பறவைக் காய்ச்சலைத் தடுக்க கால்நடைத் துறை தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துறையுடன், போக்குவரத்துத் துறையும் இணைந்து பறவைக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான ஒத்துழைப்பு வழங்கும்.

கரோனா பாதிப்பால் ஏற்கெனவே மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கரோனா, பறவைக் காய்ச்சலால் மேலும் பாதிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.