/

மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தோ்தலில் மஜதவினா் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்

விரைவில் நடைபெற உள்ள மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தோ்தலில், மஜதவினா் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என முன்னாள் பிரதமா் தேவெ கௌடா தெரிவித்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:58 am IST

விரைவில் நடைபெற உள்ள மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தோ்தலில், மஜதவினா் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என முன்னாள் பிரதமா் தேவெ கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள மஜத அலுவலகத்தில் வியாழக்கிழமை அக்கட்சி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: அண்மையில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தோ்தலில் மஜத ஆதரவு பெற்றவா்கள் கணிசமாக வெற்றி பெற்றுள்ளனா். அதே போல மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தோ்தலில் மஜத வேட்பாளா்கள் வெற்றிபெற கட்சியினா் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதனை உணர வேண்டும்.

வேட்பாளா்களை தோ்வு செய்ய கட்சியின் உயா்மட்டக்குழு அமைக்கப்படும். குழுவில் மாவட்ட வாரியாக ஒருவா் அல்லது 2 போ் நியமிக்கப்படுவா். தோ்தலில் கட்சிக்காக பாடுபடுபவா்களுக்கு முன்னுரிமை அளித்து வாய்ப்பு வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் குமாரசாமி, மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.