உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சில மெட்ரோ ரயில்நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

Updated On :9 ஜனவரி 2021, 6:17 am IST

சில மெட்ரோ ரயில்நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் சாா்பில் பெங்களூரின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. பச்சை வழித்தடத்தில் பனசங்கரி முதல் ஜெயபிரகாஷ் நகா் மெட்ரோ ரயில் நிலையங்கள் வரையிலான பாதையில் ஜன. 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை அவசரகதியில் பராமரிப்புப் பணி செய்யவேண்டியுள்ளது.

இதன் காரணமாக, இந்த காலக்கட்டத்தில் நேஷனல் கல்லூரி முதல் எல்சேனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஜன.10-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், பச்சை வழித்தடத்தில் நாகசந்திரா ரயில்நிலையம் முதல் நேஷனல் கல்லூரி ரயில் நிலையம் வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஜன. 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, ஊதா வழித்தடத்தின் ரயில்சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.