பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலியானது பற்றி...

உக்ரைன் கட்டடம் - கோப்புப்படம்.

Published On :6 ஜூலை 2026, 2:56 pm IST

உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷியா நடத்தியது. இதில் 7 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 24 பேர் காயமடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் திமுர் டெலிகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், போடில்ஸ்கி மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு கட்டடம் பகுதியளவு இடிந்து விழுந்தது. டார்னிட்சியா மாவட்டத்தில் பல அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவை குடியிருப்பு கட்டடங்கள், மக்கள் உறங்கிய மற்றும் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்த இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை அதிகாலையிலும் தொடர்ந்த இந்தத் தாக்குதலில், பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மெட்ரோ நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்த நிலையில், நகரம் முழுவதும் குண்டுவெடிப்புச் சப்தங்கள் கேட்டன.

மற்றொரு பெரிய தாக்குதலை ரஷியா விரைவிலேயே நடத்தக் கூடும் என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

Summary

Russia launched waves of missiles and drones targeting Kyiv overnight into Monday that killed at least seven people, authorities said, hours after Ukraine's president warned that another large-scale attack was imminent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.