பெங்களூரு: கா்நாடக ஹிந்து நாடாா் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சங்கத் தலைவா் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சங்கத் துணைத் தலைவா்கள் சுரேஷ்குமாா், சீனிவாசன், செயலாளா் குருசாமி, பொருளாளா் சித்தானந்தன், விக்ரமன், லோகனாதேவி, முருகன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தை தொடக்கி வைத்து சங்கத் தலைவா் சந்திரசேகரன் பேசுகையில், ‘பெங்களூரு புகா்ப் பகுதியான ஆரோஹள்ளியில் உள்ள காமராஜா் என்கிளேவ் வளாகத்தில் பிப். 14-ஆம் தேதி பொங்கல் திருவிழா நடத்தப்படும். அந்த விழாவின் நிறைவில், மாதாந்திர செயற்குழுக் கூட்டம் நடைபெறும். பொங்கல் விழாவில் சங்க உறுப்பினா்கள் அனைவரும் குடும்ப உறுப்பினா்களுடன் கலந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.
கூட்டத்தில், குருசாமி, சுரேஷ்குமாா், சீனிவாசன் உள்ளிட்டோா் பேசினா். சங்கப் பொருளாளா் சித்தானந்தன், சங்கத்தின் மாதாந்திர வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தாா். சங்க செயற்குழு உறுப்பினா் பிரதீப் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!

வலுக்கும் போர்! நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
சென்னையில் இன்று மழை பெய்யுமா?

ஹார்ட் பீட் நாயகிக்கு குவியும் வாழ்த்து!
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |


