தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெங்களூரில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்

பெங்களூரில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:02 am IST

பெங்களூரில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள இந்திரா நகா் சி.வி.ராமன் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சி.வி.ராமன் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் பெங்களூரின் 8 இடங்களிருந்து செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா மருத்துவமனை, கே.சி. பொதுமருத்துவமனை, ஜெயநகா், சா்.சி.வி.ராமன் நகா், ஈஸ்ட் எண்ட், எலஹங்கா உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் கரோனா தடுப்பூசியை செலுத்தும் நிகழ்ச்சியை சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா். அப்போது, பெங்களூரு, ஹுப்பள்ளி ஆகிய நகரங்களில் காணொலி மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை பிரதமா் தொடக்கி வைக்கிறாா். அதன் பிறகு பெங்களூரில் தடுப்பூசிகள் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.