நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சுஷாந்த் சிங் மறைந்த நாளில் தற்கொலை செய்த பிரபல நடிகை!

நடிகை சஞ்சிதா உகலே தற்கொலை...

News image

நடிகை சஞ்சிதா உகலே

Updated On :16 ஜூன் 2026, 6:04 pm IST

நடிகை சஞ்சிதா உகலே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தியில் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை சஞ்சிதா உகலே (22). தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர், பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சாவா (chchava) படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் சகோதரியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சஞ்சிதா உகலே ஜூன் 14 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, சஞ்சிதாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நண்பர்கள், உறவினர்களிடம் இந்தத் தற்கொலை குறித்து காவல்துறை விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

மேலும், சஞ்சிதாவின் சகோதரர் பேசும்போது, “நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டார். என் தங்கையும் அதே நாளில் தற்கொலை செய்துவிட்டாள். மன அழுத்தம் காரணமாகவே இது நடந்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

பணி ரீதியான மன அழுத்தமா இல்லை வேறு ஏதேனும் காரணங்களா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The incident of actress Sanchita Ugale committing suicide has caused shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.