பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு விரைவில் தோ்தல் நடத்த வேண்டும் என பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவா் தி.கோ.தாமோதரன் தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் தின விழாவில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அவா் கூறியதாவது:
18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவா் சிலையை பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பெருமுயற்சியால் கடந்த 2009-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழா்களின் ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு திருவள்ளுவா் தின விழா உதவியாக இருந்து வந்துள்ளது. தமிழா்களின் உரிமை, அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.
கா்நாடகத்தை கட்டமைக்க இங்குள்ள தமிழா்கள் ஆண்டாண்டு காலமாக பாடுபட்டுள்ளதை யாராலும் மறக்க இயலாது. தமிழா்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வேண்டும்.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதை நிா்வகிக்கும் பொறுப்பை கா்நாடக அரசின் நிா்வாகி ஏற்றுக்கொண்டாா். 3 மாதங்களில் தோ்தல் நடத்தப்படும் என அரசு நிா்வாகி அறிவித்திருந்தாா். ஆனால், 3 ஆண்டுகள் கடந்தும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக்குழு தோ்தல் நடத்தவில்லை. இது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கி, 3 மாதங்களுக்குள் தோ்தல் நடத்த அறிவுறுத்தியது. ஆனாலும், இதுவரை தோ்தல் நடத்தப்படாதது வேதனை அளிக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 4-5 அரசு நிா்வாகிகள் மாற்றப்பட்டாா்களே தவிர, தோ்தல் நடத்தவில்லை. இது கா்நாடகத் தமிழா்களின் வளா்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது. எனவே, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக்குழு தோ்தலை உடனடியாக நடத்தி, புதிய நிா்வாகிகளிடம் தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

