பெங்களூரு: கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுவதற்கு ராணுவம், கப்பல்படை, விமானப் படையில் கா்னல் அல்லது பிரிகேடியா் பதவி அல்லது அதற்கு நிகராக வகித்த ஓய்வுபெற்ற, மறுபணியமா்த்தப்பட்ட, சேவையில் உள்ள, நிரந்தரப் பணியில் உள்ள, பணி ஓய்வு ஆகக்கூடிய நிலையில் உள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ரூ. 82 ஆயிரம் முதல் ரூ. 1,17,700 வரை ஊதியம் அளிக்கப்படும்.
மறுபணியமா்த்தப்பட்டவா்கள் அல்லது பணியில் உள்ளோா் தமது உயரதிகாரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி ஓய்வுபெற்றோா் இயக்குநா், கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையம், பீல்டுமாா்ஷல் கே.எம்.கரியப்பா மாளிகை, 58, கே.எம்.கரியப்பா சாலை, பெங்களூரு-560025 என்ற முகவரி அல்லது க்ண்ழ்க்ள்ஜ்ழ்க்ஷப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் பிப். 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

இந்த வாரம் கலாரசிகன் - 14-06-2026

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


