வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பங்குச் சந்தையில் 57 புள்ளிகள் உயர்வு

மத்திய பட்ஜெட்டில் அதிருப்தியுற்ற மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 57

News image
Updated On :2 மார்ச் 2013, 1:09 am IST

மத்திய பட்ஜெட்டில் அதிருப்தியுற்ற மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 57 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு அம்சங்களில் அதிருப்தியடைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை பங்குச் சந்தையின் குறியீட்டளவான சென்செக்ஸ் 291 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. ஆயினும் வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை மீண்டும் லாபகரமான பாதைக்குத் திரும்பியது. வர்த்தக முடிவில் 57 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டளவு 18,918 என்ற அளவில் நிலைத்தது.

மாருதி சுஸýகி நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் வரை அதிகரித்து விற்பனை ஆகின. பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது. எச்.டி.எஃப்.சி., லார்சன் அண்ட் டூப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சிப்லா, ஜிண்டால் ஸ்டீல், டாடா பவர், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை அதிக விலைக்கு விற்பனை ஆகின.

நுகர்வோர் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், மூலதனப் பொருள் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வங்கித் துறை ஆகியவற்றின் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்றே சரிவுற்றதை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ் போன்றவை லேசான லாபம் அடைந்தன.

தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக இருந்தது. நிஃப்டி குறியீட்டளவில் 26 புள்ளிகள் அதிகரித்து 5,719 என்ற அளவில் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.