தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பங்குச் சந்தையில் 55 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 55 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டெண் 18,774 என்ற அளவில் நிலைத்தது.

News image
Updated On :21 ஜூன் 2013, 5:42 pm

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 55 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டெண் 18,774 என்ற அளவில் நிலைத்தது.

வியாழக்கிழமை 526 புள்ளிகள் வீழ்ச்சியைக் கண்ட பின்பு பங்குச் சந்தையில் லாபகரமான போக்கு காணப்பட்டது. ரூபாயின் மதிப்பை சரி கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை பங்கு முதலீட்டாளர்களை சற்று ஆறுதல் அடையச் செய்தது. சில குறிப்பிட்ட துறை நிறுவன பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம், ஆட்டோ மொபைல் துறை நிறுவனப் பங்குகள் வரவேற்பை பெற்றன. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தது. உலோகம், வீட்டு வசதி, நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே இருந்தன.

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் விற்பனை ஆகின. 13 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டம் அடைந்தன. ஐ.டி.சி. பங்கு விலையில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய பங்குச் சந்தையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் லேசான முன்னேற்றம் இருந்தது. வர்த்தக முடிவில் 11 புள்ளிகள் அதிகரித்து நிஃப்டி குறியீட்டெண் 5,667 என்ற அளவைத் தொட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.