/

குறித்த கால வைப்பு நிதி வட்டி 4 % வரை உயர்வு

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை குறித்த கால வைப்புத் தொகை மீதான (பிக்சட் டெபாசிட்) வட்டியை 4 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன. இதைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் வட்டியை உயர்த்தும் எனத் தெரிகிறது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:55 pm

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை குறித்த கால வைப்புத் தொகை மீதான (பிக்சட் டெபாசிட்) வட்டியை 4 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன. இதைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் வட்டியை உயர்த்தும் எனத் தெரிகிறது.

எச்டிஎப்சி வங்கி, 15 நாள்கள் முதல் 181 நாள்கள் வரையிலான முதிர்வு கால அளவு கொண்ட பிக்சட் டெபாசிட் வட்டியை 1 சதவீதம் உயர்த்தி உள்ளது. 182 நாள்கள் முதல் 1ஆண்டு வரையிலான டெபாசிட் வட்டியை 0.75 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த வட்டி உயர்வு ஜூலை 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி, ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகைக்கு 14 நாள்கள் முதல் 29 நாள்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் வட்டியை 4 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதாவது 4லிருந்து 8 சதவீதமாகி உள்ளது. 7 முதல் 14 நாள்கள் வரையிலான டெபாசிட் வட்டியை 3.5இலிருந்த 7.5 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

29 நாள்கள் முதல் 1 ஆண்டு வரையிலான பல்வேறு முதிர்வு கால அளவு கொண்ட டெபாசிட்டுக்கான வட்டியை 0.5 முதல் 2.25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. யெஸ் பாங்க் கடன் மற்றும் டெபாசிட் வட்டியை புதன்கிழமை 0.5 சதவீதம் உயர்த்தியது.

ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. இதனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கப்படும் கடனுக்கான வட்டியை உயர்ந்ததால், வங்கிகளில் பணப்புழக்கம் குறைந்தது. நிலைமையை சமாளிக்க பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டை ஈர்ப்பதற்காக வங்கிகள் வட்டியை உயர்த்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.