நடிகர் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம், கடந்த மே 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த நாள்களில் டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்தன.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கே.ஜி.எஃப். படத்துக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர், பிளாஸ்ட் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில், கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை மையப்படுத்தி விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படம் வரும் ஜூன் 25 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
Information regarding the OTT release of actor Arjun's film 'Blast' has been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











